என்ன இப்படியெல்லாம் சொல்லிட்டாரே.... நடிகர் சூரியின் முகத்திரையைக் கிழித்த உயிர் நண்பன்! அப்போ வெறும் பேச்சுதானா.... அதிர்ச்சி வீடியோ..!!!



soori-kottachi-promotion-controversy

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக வெற்றிகரமாக பயணம் செய்து வருகிறார் சூரி. இந்த நிலையில், அவரைப் பற்றிக் காமெடி நடிகர் கொட்டாச்சி கூறிய சில கருத்துகள் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நண்பராக இருந்த காலத்தில் உதவி கேட்டு சென்றபோது சூரி மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

ப்ரமோஷன் கேட்டு சென்றபோது மறுப்பு

சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய கொட்டாச்சி, ஒரு படத்திற்காக சின்ன அளவில் ப்ரமோஷன் செய்யும்படி சூரியிடம் கேட்டதாக கூறினார். அதற்கு சூரி மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “வெற்றிமாறன் சாரிடம் பலர் துணை இயக்குநர்களாக இருந்து தற்போது படம் எடுத்து வருகிறார்கள். நான் ஒருவருக்கு ப்ரமோஷன் செய்தால் மற்றவர்களும் தொடர்ந்து உதவி கேட்பார்கள். அதனால் என்னால் செய்ய முடியாது” என்று சூரி கூறியதாக கொட்டாச்சி தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக சட்டசபையில் உதயநிதி பேசப்பேச ரசித்து கேட்டு சிரித்த முதல்வர் விஜய்! அப்படி என்னதான் பேசினார்.... அந்த காட்சியை நீங்களே பாருங்க!!!

“ஒரே அறையில் தங்கி வாய்ப்பு தேடியோம்”

இதையடுத்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு சிறிய பதிவு அல்லது ஒரு வாய்ஸ் மெசேஜ் மட்டுமாவது தரும்படி கேட்டதாகவும், அதை வைத்து தானே ப்ரமோஷன் செய்து கொள்கிறேன் என சொன்னதாகவும் கொட்டாச்சி கூறினார். ஆனால் அதற்கும் சூரி சம்மதிக்கவில்லை என அவர் வருத்தப்பட்டார்.

அதன்பின் பேசிய அவர், “நானும் சூரியும் ஒரே அறையில் தங்கி தூங்கியிருக்கிறோம். ஒரே கல்யாண மண்டபத்தில் வேலை பார்த்திருக்கிறோம். வாய்ப்புக்காக பலரிடம் சென்றிருக்கிறோம். அந்த நாட்களை மறக்க முடியாது” என்று நினைவுகூர்ந்தார்.

விஜய் சேதுபதியுடன் ஒப்பீடு

மேலும், தற்போது நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அந்த சூழலில் பழைய நண்பனுக்காக கூட சூரி உதவிக்கு வராதது மனவருத்தமாக இருப்பதாகவும் கொட்டாச்சி தெரிவித்தார்.

இந்த பேட்டி வெளியாகியதையடுத்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: என் மீது யாரோ மாந்திரீகம் செய்து வச்சுருக்காங்க.....எனக்குத் அடிக்கடி ரத்த வாந்தி வருது! செய்தியாளர் சந்திப்பில் ரவிமோகன் சொன்ன அதிர்ச்சி தகவல்.! பகீர் வீடியோ...!!!