17 நாட்கள் தீவிர சிகிச்சையில் நடிகரின் மனைவி.... மூச்சு விட முடியல! மனைவியின் மேல் சிகிச்சைக்கு CM விஜய்யிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை.!!!



actor-muthukaalai-wife-health-condition-vijay-help-requ

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான முத்துக்காளை குடும்பத்தில் தற்போது சோகமான சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது மனைவி மாலதி, மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக கடந்த 17 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடி மேல் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல நினைவில் நிற்கும் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்த முத்துக்காளை, தமிழ் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பிடித்தவர். குறிப்பாக ‘சிக்கன் 65’ மற்றும் ‘செத்து செத்து விளையாடுவோமா’ போன்ற காமெடிகள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

இதையும் படிங்க: BREAKING : சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்! கவலைக்கிடமான நிலையில் உள்ள பிரபல இயக்குனர் வி. சேகர்!

போராட்டத்திலிருந்து உயர்ந்த நடிகர்

ராஜபாளையத்திலிருந்து ஸ்டண்ட் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்த முத்துக்காளை, கடுமையான வறுமை மற்றும் வாய்ப்பின்மையை கடந்து சினிமாவில் தனக்கென இடம் பிடித்தார். ஒருகட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர், பின்னர் அதிலிருந்து மீண்டு வாழ்க்கையை மாற்றிக் கொண்டார்.

அதுமட்டுமின்றி, தனது 50ஆவது வயதில் மூன்று பட்டப்படிப்புகளை முடித்து “படிப்புக்கு வயது தடையல்ல” என்பதை நிரூபித்தவர் என்ற பாராட்டையும் பெற்றார்.

17 நாட்களாக சுயநினைவின்றி சிகிச்சை

முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு அண்மையில் திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகும் கிருமித் தொற்று ஏற்பட்டதால் நிலைமை மோசமடைந்துள்ளது.

தற்போது அவர் சுயநினைவின்றி தீவிர மூச்சுத்திணறலுடன் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உயர்தர மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜயிடம் உருக்கமான கோரிக்கை

இந்த நிலையில், தனது மனைவியின் உயிரைக் காப்பாற்ற உதவ வேண்டும் என முதலமைச்சர் Vijay அவர்களிடம் முத்துக்காளை கோரிக்கை விடுத்துள்ளார். ‘யூத்’, ‘தமிழன்’, ‘மின்சார கண்ணா’, ‘பகவதி’, ‘சுறா’ உள்ளிட்ட பல படங்களில் விஜயுடன் இணைந்து நடித்துள்ள முத்துக்காளை, சக கலைஞராக உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது.

திரைத்துறையினரும் ரசிகர்களும் மாலதி விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேசமயம், முதலமைச்சர் தரப்பிலிருந்து உதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் திரை உலகில் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: BREAKING: ஷாக் நியூஷ்! தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு!!!