மத்திய ரிசர்வ் படையில் 9195 வேலைவாய்ப்பு.. வாய்ப்பை தவறவிடாதீங்க.. உடனே அப்பளை பண்ணுங்க..!
இன்னும் 2 நாட்களில் நிறைவடையவுள்ள மத்திய ரிசர்வ் படை வேலைவாய்ப்புக்கு உடனடியாக விண்ணப்பியுங்கள்.
* பணிகள்: ஓட்டுநர், மெக்கானிக், கார்பெண்டர், மாலி, டைலர், ப்ராஸ்பென்ட், பைப்பெண்ட், பக்லர், பார்ப்பார், ஹேர் டிரஸ்ஸர், பெயிண்டர், சமையல், வாட்டர் கேரியவர், வாஷர் மென், மேஷன், எலக்ட்ரீசியன்
* பணிகள் எண்ணிக்கை: 9195
* மாத சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை
* வயது வரம்பு: ஓட்டுனருக்கு 21 முதல் 27 வரை, இதர பணிகளுக்கு 18 முதல் 23 வரை. எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
இதையும் படிங்க: மெகா வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 25,487 காலிப்பணியிடங்கள்.. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.!
* கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, பணி அனுபவம் தேவை. ஓட்டுநர் பணிக்கு உரிமம் தேவை. மேசன், குக், பார்பர், வாட்டர் கேரியர் பணிக்கு அனுபவம் வேண்டும்
* உடல் தகுதி: ஆண்கள் உயரம் 170 சென்டிமீட்டர், மார்பு அளவு 80 செமீ. பெண்களுக்கு 157 சென்டிமீட்டர் உயரம் தேவை. விண்ணப்பதாரர் உயரத்துக்கேற்ப எடை, ஆரோக்கியமான உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்
* தேர்வு: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடல் சோதனை, உடற்தகுதி, மருத்துவ சோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு. கேள்விகள் இந்தி, ஆங்கிலத்தில் இருக்கும்
* கட்டணம்: ரூ.100 (ஆன்லைன்)
* விண்ணப்பத்தளம்: www.rect.crpf.gov.in
* விண்ணப்பிக்க இறுதி நாள்: 19.05.2026
இதையும் படிங்க: SBI Bank Jobs: எஸ்பிஐ வங்கியில் நல்ல சம்பளத்துடன் 2050 வேலைவாய்ப்புகள்.. தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?