மெகா வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 25,487 காலிப்பணியிடங்கள்.. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.!



SSC Constable Recruitment 2026: 25,487 Vacancies in Central Armed Forces 

மத்திய அரசின் ஆயுதப் படையில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான 2026 நியமன அறிவிப்பு எஸ்எஸ்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25,487 பொதுப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 23 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர்.

மத்திய அரசின் ஆயுதப் படையில் வேலை பார்க்க இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2026 ஆம் ஆண்டிற்கான காவல்துறை கான்ஸ்டபிள் பொதுப் பணியிடங்கள் 25,487 நிரப்பப்படுவதாக எஸ்எஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியில் தேர்வு செய்யப்படுவோர் மத்திய ஆயுத காவல் படை, அசாம் ரைபிள் போன்ற பல்வேறு மத்திய அமைப்பின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்படும்.

பணி தொடர்பான விபரம்:

இந்த பணிக்கு சேர விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10 ஆம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள நபர்கள் ஜனவரி 1, 2026 அன்று 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், எஸ்சி மற்றும் எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மாதந்தோறும் ரூ. 1500 வழங்க... தமிழகம் முழுவதும் நாளை(நவ..20) அனைத்து பள்ளிகளுக்கும் அரசு வெளியிட்ட அவசர அறிவிப்பு.!

விண்ணப்பம் மற்றும் சம்பள விபரம்:

விருப்பமுடையோர் மத்திய அரசின் https://ssc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதியாக டிசம்பர் 31 ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெற்று அதனை தொடர்ந்து உடல் திறன், தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு, ஆவண சரிபார்ப்பு ஆகியவை நடக்கும். இந்த பணிக்கு சேர்வோருக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.