கட்டுகட்டாக சரியும் அதிமுக! நேத்து 3 பேரு.. இன்னைக்கு அடுத்த ஆளு! அதிமுகவின் முக்கிய புள்ளி விலகல்.... நாளுக்கு நாள் நடக்கும் அதிரடி அரசியல்...!!!
தமிழக அரசியலில் அதிமுக அணிக்குள் நிலவி வரும் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சியைவிட்டு விலகி தவெகவில் இணைந்த நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா அதிமுகவிலிருந்து விலகத் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த அதிரடிக்கு தயாராகும் அதிமுக எம்.எல்.ஏ?
தாராபுரம் தொகுதி சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல் ஆகியோர் நேற்று தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, அடுத்ததாக இசக்கி சுப்பையாவும் அதே முடிவை எடுக்க உள்ளதாக கூறப்படுவது அதிமுக தலைமையினருக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சி.வி.சண்முகத்தின் தில்லுமுள்ளு வேலை.... எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி! அவசர மீட்டிங்.... அதிர்ச்சியில் அதிமுக!!!
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் மாற்றங்களே இந்த முடிவுக்கு பின்னணி என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து இசக்கி சுப்பையா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
அம்பாசமுத்திரத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்
அம்பாசமுத்திரம் தொகுதியில் நீண்டகாலமாக வலுவான ஆதரவை கொண்டவராக பார்க்கப்படும் இசக்கி சுப்பையா, கடந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தவெக வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இதற்கு முன்பும் 2011 மற்றும் 2021 தேர்தல்களில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உள்ளது. தொகுதியில் தனிப்பட்ட ஆதரவாளர்கள் அதிகமாக உள்ள நிலையில், இவரது முடிவு அதிமுக அமைப்புக்கு தென் மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தொடரும் அரசியல் மாற்றங்கள்
சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்சினைகள் தொடர்ந்து வெளிப்படத் தொடங்கியுள்ளன. குறிப்பாக சில எம்.எல்.ஏக்கள் கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் சூழலில், மேலும் சிலர் அடுத்த கட்டத்தில் முடிவு எடுக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! திடீரென ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏக்கள்.... செம ஷாக்கில் இபிஎஸ்.!!!