தலைகீழாக மாறப்போகும் திமுக! சீனியர்களுக்கு செப்டம்பரில் காத்திருக்கும் ஷாக்...! உதயநிதி ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவால் அலறும் அரசியல் களம்!!!



dmk-organisational-restructuring-udhayanidhi-youth-wing

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக அமைப்பில் விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட அளவிலான நிர்வாக மாற்றங்கள் முதல் இளைஞரணி தலைமையில் புதிய பொறுப்பாளரை நியமிப்பது வரை பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

மாவட்ட அமைப்பில் மாற்றங்களுக்கு பரிந்துரை

தொகுதி வாரியான மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 38 குழுக்களிடம் இருந்து பெறப்பட்ட தொண்டர்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, லண்டன் பயணத்திற்கு முன்பு தங்கம் தென்னரசு, கனிமொழி, எழிலன் நாகநாதன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவை அவர் அமைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: இவுங்கள வச்சுக்கிட்டு இனி வேலைக்கு ஆகாது... ஸ்டாலின் கையில் அந்த ரகசிய அறிக்கை! தூக்கத்தை துளைத்த சீனியர்கள்....நாளை நடக்கப்போகும் மெகா சம்பவம்..!!!

அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், திமுக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும், இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற முறையை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும், மண்டலப் பொறுப்பாளர் பதவி நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளைஞரணி பொறுப்பில் மாற்றம்?

இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து விலகலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இளைஞரணிக்கு புதிய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய பொறுப்புகள் குறித்து ஆலோசனை

உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் முதன்மைச் செயலாளர் அல்லது பொருளாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்குப் பிறகு திமுகவின் முக்கிய அமைப்பான இளைஞரணியை வழிநடத்தப் போவது யார் என்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: எனக்கு இன்னும் டைம் இருக்கு! 2027 வரை நான் தான்... அடம் பிடிக்கும் துரைமுருகன்! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!