என்னை எல்லாரும் அசிங்கமா பேசுனாங்க! ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுதேன்... அந்த இடத்தில் விஜய் சார் இல்லன்னா அவ்வளவுதான்! பல வருடத்திற்கு பிறகு உண்மையை போட்டுஉடைத்த நடிகை சோனா..!!!
நடிகை சோனா, விஜய்யுடன் நடித்த ‘ஷாஜகான்’ படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது ஏற்பட்ட அவமானகரமான சூழலில் நடிகர் விஜய் தன்னுக்கு துணையாக நின்றது இன்னும் மறக்க முடியாத அனுபவமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு வெளியான ‘ஷாஜகான்’ திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானதாக சோனா கூறினார். குறிப்பாக, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சரக்க வச்சிருக்கேன்’ பாடலில் விஜய்யுடன் இணைந்து நடனமாடியதுதான் அவரை கவனிக்க வைத்தது. ஆரம்பத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஒப்பந்தமான அவருக்கு, பின்னர் சில நகைச்சுவை காட்சிகளிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதை என்னால் மறக்க முடியவில்லை.... என்னை விடாது துரத்தும் துயரம்! ஆஃப் கேமரா பேட்டியில் மனம் திறந்து பேசிய தவெக விஜய்!
படப்பிடிப்பில் ஏற்பட்ட சங்கடம்
படப்பிடிப்பின் போது ஒரு காட்சிக்காக கிளாமரான உடை அணிய சொல்லப்பட்டதாக சோனா கூறினார். ஆனால் அந்த உடை தனக்கு சௌகரியமாக இல்லை என்றும், அதை மாற்றிக் கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அப்போது படக்குழுவில் இருந்த சிலர், “ஐட்டம் பாடலுக்கு ஆட வந்துவிட்டு இப்போது ஏன் தயக்கம்?” என்பது போல அவமரியாதையாகப் பேசியதாகவும் சோனா நினைவு கூர்ந்தார். அந்த வார்த்தைகள் தன்னை மிகவும் பாதித்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே அழுதுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
உடனே உதவிக்கு வந்த விஜய்
சோனா அழுவதை பார்த்த விஜய், என்ன நடந்தது என்று நேரடியாகக் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் முழு விபரத்தையும் அறிந்த அவர், “உங்களுக்கு அந்த உடை சௌகரியமாக இல்லையெனில் மாற்றிக் கொள்ளுங்கள்” என்று ஆதரவாக பேசியுள்ளார்.
மேலும், சோனாவிடம் தவறாகப் பேசியவர்களையும் விஜய் கண்டித்ததாக அவர் தெரிவித்துள்ளார். “அவர் ஒரு பெண்... எப்படி பேச வேண்டும் என்ற நாகரிகம் இல்லையா?” என்று விஜய் கேள்வி எழுப்பியதாக சோனா கூறியுள்ளார்.
“அந்த ஆதரவை மறக்க முடியாது”
அந்த நேரத்தில் விஜய் கொடுத்த தைரியமும் ஆதரவும் தான் மனஉறுதியை அளித்ததாக சோனா உருக்கமாக பகிர்ந்துள்ளார். சினிமா துறையில் புதிதாக இருந்த காலத்தில் நடந்த அந்த சம்பவம் இன்னும் மனதில் நிற்கும் நினைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.