தாய் - மகள் இடையேயான படுக்கை தகராறு! இறுதியில் குடும்பத் தலைவனுக்கு விபரீதமாக முடிந்தது.... போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி...!!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் குடும்பத்துக்குள் ஏற்பட்ட சிறிய தகராறு, குடும்பத் தலைவரின் உயிரைப் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் மற்றும் மகள் இடையே படுக்கையில் தூங்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அனில் கபூர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் சிட்னிஸ் கி கோத் பகுதியில் நடந்துள்ளது.
படுக்கையை மையமாக வைத்து தொடங்கிய வாக்குவாதம்
குவாலியரை சேர்ந்த அனில் கபூர், தனது இரண்டாவது மனைவி ரிது மற்றும் மகள் மான்சியுடன் வசித்து வந்தார். கடந்த மார்ச் மாதத்தில் திருமணம் ஆன மான்சி, சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, மான்சி பயன்படுத்தும் படுக்கையில் ரிது தூங்கச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது பெரிய சண்டையாக மாறியதால் வீட்டில் பதற்றமான சூழல் உருவானது.
சத்தத்தால் பதற்றம்... திடீரென சரிந்த அனில் கபூர்
தகவலின்படி, வீட்டில் ஏற்பட்ட கடும் சத்தம் மற்றும் பதற்றமான நிலை காரணமாக, ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அனில் கபூர் திடீரென நெஞ்சு வலியால் கீழே விழுந்தார். அதன்பின் குடும்பத்தினர் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதற்கட்ட தகவல்படி, மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பின்னணியில் சிக்கலான குடும்ப உறவு
இந்த விவகாரத்தின் பின்னணியில் குடும்ப உறவுகள் தொடர்பான சிக்கலான தகவல்களும் வெளிவந்துள்ளன. அனில் கபூரின் முதல் மனைவி கஞ்சன் கடந்த 2019-ல் உயிரிழந்தார். குழந்தைகள் இல்லாததால், ரிது தனது மகள் மான்சியை அனில் - கஞ்சன் தம்பதியருக்கு தத்து கொடுத்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கஞ்சன் இறந்த பிறகு, 2023-ல் ரிதுவை அனில் கபூர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், வீட்டுக்குள் ஏற்பட்ட சாதாரண தகராறு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அனில் கபூரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான துல்லியமான காரணம் உறுதி செய்யப்படும் என காவல்துறை அதிகாரி மனிஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.