தமிழகம்

அடுத்த வாரம் மனைவிக்கு வளைகாப்பு! கார் விபத்தில் பிரபல செய்தியாளர் தாயுடன் பலி!

Summary:

reporter died in accident


திருப்பூர் அருகே கார் மிது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தியாளர் ராஜசேகர் மற்றும் அவரது தாய் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தியாளர் ராஜசேகரும், அவரது தாயார், சகோதரி ஆகியோர் கோவை மேட்டுப்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார், அவிநாசி நரியம்பள்ளிப்புதூர் அருகே சென்ற போது,  ஊட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்தும், காரும் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த ராஜசேகரின் தாயார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

செய்தித்தாளில் திருப்பூர் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் அவருடைய மனைவிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருந்தார்.

ராஜசேகர் கோவை தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த ராஜசேகரின் தாயின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக உடலை அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து அவினாசி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement