ரஜினியின் அதிரடி அறிவிப்பு! ரசிகருக்கு மாரடைப்பு மரணம்!

Rajini fan died


Rajini fan died

நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் நிலைப்பாடு விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த நிலையில், இன்று சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்தநிலையில், ரஜினி செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் என்றுமே பதவிகளுக்கு ஆசைப்பட்டவன் கிடையாது. ‘ நான் முதல்வர் ஆகமாட்டேன், இளைஞர் ஒருவரே எனது கட்சியின் முதல்வர் வேட்பாளராக நிற்பார். என தெரிவித்தார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

rajini

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் பாபா என்கிற முருகேசன் (வயது 52 ). இவர் மணப்பாறை நகர ரஜினி மக்கள் மன்ற செயலாளராக உள்ளார். இவர் அங்குள்ள டீக்கடை ஒன்றில் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். மிகத் தீவிரமான ரஜினி ரசிகர். ரஜினியின் அரசியலை ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ரஜினியின் பேட்டிக்கு பிறகு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.  பாபா முருகேசன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த  நிலையில் மருத்துவமனையில் தனது செல்போனில் ரஜினி பேட்டியை பார்த்ததாகவும் அதில் நான் முதல்வர் வேட்பாளர் இல்லை என ரஜினி கூறிய செய்தியைக் கேட்டு பாபா முருகேசனுக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டு சுமார் 11 மணியளவில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.