அரசியல் தமிழகம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி!

Summary:

Rajendra Balaji again appointed party post

தமிழக பால்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வந்தார். அப்போது, இவர் கட்சியில் அனைத்து பிரச்சனைகளுக்கும் கருத்து தெரிவித்துள்ளார். ராஜேந்திர பாலாஜியின் ஒவ்வொரு பேட்டியும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் கடந்த 22ம் தேதி விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டார். அப்போது, விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக, செயலாளர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக ஒருவர் நியமிக்கப்படும் வரை ராஜேந்திர பாலாஜி பொறுப்பில் இருந்து மாவட்ட பணிகளை கவனித்துக்கொள்வார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கூட்டறிக்கையில் அறிவித்துள்ளனர்.


Advertisement