குடையுடன் போங்க! உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை! கொட்டித் தீர்க்க போகும் கனமழை!

குடையுடன் போங்க! உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை! கொட்டித் தீர்க்க போகும் கனமழை!



Rain update for chennai and tamilnadu

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் அவ்வப்போது மழை பெய்வதோடு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான வானிலை ஆய்வு மைய தகவலின் படி வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாகவும், ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதாலும் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

Rain update

மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை தொடரும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.