தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!



rain-in-tamilnadu-T8JMFB

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, பருவகாற்று காரணமாக கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. இந்தநிலையில், வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 5 ஆம் தேதி  மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இன்று மற்றும் நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூா், செங்கல்பட்டு மாவட்டம், தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அதிக வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 8-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.