அரசின் பொதுச்சொத்துக்களை திருடியவர்களை சிறைபிடித்த இளைஞர்கள்!.

அரசின் பொதுச்சொத்துக்களை திருடியவர்களை சிறைபிடித்த இளைஞர்கள்!.


public protest in alangudi

கடந்த மாதம் தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.

கஜா புயலால் அப்பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள கோடிக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தது.

மக்கள் குடிக்க நீரின்றி, தங்குவதற்கு வீடுகள் இல்லாமல் தவித்துவரும் நிலையில், சிலர் அப்பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி விற்பனை செய்கின்றனர். அந்த பகுதியில் கடத்திச்செல்லும் மரங்கள் வண்டி வண்டியாக செல்கிறது. இதனைப்பார்த்த அதிமுக கட்சியினர் வண்டியை சிறைபிடித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக-வில் மாவட்ட பொறுப்பில் இருக்கும் அப்பகுதியை சேர்ந்த எஸ்.பி. என்.குணசேகரன் என்ற இளைஞர் அவரது கட்சிக்காரர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  எஸ்.பி. என்.குணசேகரன், யாரோ செய்யும் திருட்டு செயலுக்கு ஆளுங்கட்சியின் பெயர் கெட்டுப்போகிறது. எனவே இந்த மரங்களை கடத்தும் குற்றவாளியை விரைவில் கைதுசெய்யவேண்டும், மக்களின் சொத்துக்களை யார் திருடினாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கவேண்டும் என ஆக்ரோஷடத்துடன் போராட்டம் நடத்தினர்.

சம்பவம் அறிந்துவந்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மரங்கள் ஏற்றப்பட்டிருந்த அந்த வண்டியை காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். இதனையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்கள் கலைந்துசென்றனர்.