அரசியல் தமிழகம்

உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும்! ப.சிதம்பரம் குறித்து பிரேமலதா கருத்து!

Summary:

premalatha talk about p chidhambaram case


மத்திய நிதி அமைச்சராக  ப.சிதம்பரம் இருந்தபோது 2007-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இந்த அனுமதி அளிக்கப்பட்டதில் சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் நேற்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென நுழைந்தனர்.  ஆனால் வீட்டில்  ப.சிதம்பரம் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து திரும்பினர்.

இன்று காலை ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவில் உத்தரவு பிறப்பிக்க நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். மேலும், சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், ப.சிதம்பரம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, "உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும், தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். 


Advertisement