சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் ஒலித்த "தஞ்சாவூரு மண்ணு எடுத்து.."பாடல்! மறக்கமுடியாத நிகழ்வு! வைரல் வீடியோ! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் சினிமா

சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் ஒலித்த "தஞ்சாவூரு மண்ணு எடுத்து.."பாடல்! மறக்கமுடியாத நிகழ்வு! வைரல் வீடியோ!

சிங்கப்பூர் நாட்டில் இரண்டுமுறை அதிபராக இருந்தவர் எஸ். ஆர். நாதன். சிங்கப்பூரின் அதிபராக 1999ம் ஆண்டு முதன்முதலாக பதவி ஏற்றார். பின்னர் 2011 வரை இருமுறை சிங்கப்பூரின் அதிபராக இருந்து, நீண்ட காலம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு  காலமானார். எஸ்.ஆர்.நாதனின் உடல் சிங்கப்பூரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கின் போது எஸ்.ஆர். நாதனுக்கு பிடித்தமான சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் வைரமுத்து எழுதிய "தஞ்சாவூரு மண்ணு எடுத்து, தாமிரபரணி தண்ணி எடுத்து ..." என்ற பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

பொதுமக்களின் அஞ்சலிக்காக நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்படிருந்த எஸ்.ஆர்.நாதனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான தலைவர்களும், பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது எஸ்.ஆர். நாதனுக்கு பிடித்தமான "தஞ்சாவூரு மண்ணு எடுத்து, தாமிரபரணி தண்ணி எடுத்து ..." தமிழ் பட பாடல் ஒலிபரப்பானது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo