“அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!
ஷாக் நியூஷ்! கடையில் வாங்கின பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி...!!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கடையில் பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி ஸ்ரீத்திகா திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பஜ்ஜி சாப்பிட்ட சிறிது நேரத்தில் உடல்நலக்குறைவு
பெரியபாளையம் அருகே உள்ள கடை ஒன்றில் ஸ்ரீத்திகா உணவுப் பொருள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உடல்நிலை மோசமடைந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: திமுக அதிகாரத்தை அடியோடு களையெடுக்கும் தவெக! விஜய்யின் அடுத்த மாஸ்டர் பிளான்.... கலக்கத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்...!!!
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து 2 நாட்கள் சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இறுதியில் சிறுமி உயிரிழந்தார்.
உணவில் நச்சுத்தன்மை இருந்ததா? போலீசார் விசாரணை
சிறுமி பஜ்ஜி சாப்பிட்ட பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் உட்கொண்ட உணவில் ஏதேனும் நச்சுத்தன்மை இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உணவு தயாரிக்கப்பட்ட விதம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
கடையில் ஆய்வு
இதையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறுமி உணவு சாப்பிட்டதாக கூறப்படும் கடையிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிரேதப் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதலன் கூறிய ஒரே வார்த்தை கேட்டு.. 2 பிள்ளைகளுக்கும் பெத்த தாய் செய்த கொடூரம்! பகீர் சம்பவம்...!!!