ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
வேகமெடுக்கும் ஒமைக்ரான்..! தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி.! சென்னையில் மட்டும் எத்தனை பேர் தெரியுமா.?
உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து வந்தாலும், உருமாறியுள்ள ஒமைக்ரான் வகை கொரோனாவால் அச்சம் ஏற்பட தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் ஒமைக்ரான் வகை கொரோனாவை எதிர்கொள்ள தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் உறுதியாகி உள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.