
No leave for police
வரும் 10ம் தேதி முதல் தமிழக காவல்துறையில் பணிபுரியும் அனைவரும் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளுக்கு தயாராக இருக்குமாறு காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவம்பர் 17-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், அவர் விசாரித்து, தீர்ப்பை தள்ளி வைத்த வழக்குகளில், 17-ந்தேதிக்கு முன்பு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
அவற்றில் முக்கியமானது, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு. இந்தநிலையில், அயோத்தி வழக்கு முடிவடைந்து விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தீர்ப்பினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில், முன்னெச்சரிக்கை காரணமாக காவலர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement