எச்ஐவி ரத்தம், பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு புதிய சலுகைகள்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

எச்ஐவி ரத்தம், பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு புதிய சலுகைகள்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!



new-scheme-announced-for-hiv-blood-inserted-pregnant-wo

சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ரத்த பரிசோதனை செய்யாமல் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கர்ப்பிணி பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் ரத்தம் செலுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட 3 ஊழியர்கள் பணியிலிருந்து அதிரடியாக  நீக்கப்பட்டுள்ளனர்.

   pregnant women

அதனை தொடந்து அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் அரசு வேலை கொடுப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கர்ப்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. அவர்கள் குடியிருக்கும் பகுதியில் 3 சென்ட் இடத்தில், பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டது.
இந்த அரசாணையை விருதுநகர் ஆட்சியர் சிவஞானம், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை நேரில் சந்தித்து நேரில் சந்தித்து வழங்கினார்.

அதுமட்டுமின்றி தமிழக அரசின் நிதியுதவியை பெறுவதற்காக புதிதாக தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகமும் வழங்கப்பட்டது.