குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட மகன்.!! பின்னர் நடந்த பகீர் சம்பவம்..!!murder-ywypes

வில்லிவாக்கம் பலராமபுரம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 67). இவரது மகன் சிவராஜ் (வயது 47). சிவராஜ் என்பவர் மதுபோதைக்கு அடிமையானவர். இந்நிலையில் இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு தனது தாயாரான தனலட்சுமிடம் தகராறு செய்திருக்கிறார்.

ரகளையில் ஈடுபட்ட அண்ணணை, தம்பி பிரகாஷ் கண்டித்துள்ளார். பிறகு இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், தம்பியான பிரகாஷ், சிவராஜனை கட்டையால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் இரத்த வெள்ளத்தில் கிடந்த சிவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக்கண்ட தனலட்சுமி வீட்டின்  அருகில் உள்ளவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார் பிரகாஷை கைது செய்து, சிவராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.  மேலும் இச்சம்பவம் குறித்து போலிஸார் பிரகாஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.