90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
3 மனைவிகள்.! 2-வது மனைவியின் கணவரால் நேர்ந்த நேர்ந்த கதி.! சுடுகாட்டில் நடந்த பயங்கர சம்பவம்.!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகேயுள்ள மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமா. இவர் மீது சென்னையில் இருக்கும் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேலையூர் கிராமப்பகுதியில் சுடுகாடு அருகே ஒரு ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலரிந்த்து சம்பவ இடத்திற்கு விரைந்த, போலீசார் அங்கு சென்று பார்த்த போது, அங்கு கிண்டாந்த சடலம் சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. அவரது உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர் மர்ம நபர்கள். மேலும், அவரது சடலத்தை அவரது அப்பாவின் சமாதிக்கு அருகே வைத்து எரித்துள்ளனர்.
சதீஷ் அவரது முதல் மனைவி பிரிந்ததால், 2-வதாக லட்சுமி என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன் பின் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சதீஷ், இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். லட்சுமி ஏற்கனவே திருமணமானவர், அவருடைய முதல் கணவர் தான் சதீஷை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்றும் இதற்கு லட்சுமியும் உடந்தை என்றும் கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.