ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
மூன்று பெண்களுடன் காதல் சில்மிஷம்! ஆகாஷ் ஆபாச வீடியோவை காட்டி பெண்களை மிரட்ட.... பெண்களின் துணிச்சல் செயல்!
மத்தியப் பிரதேசத்தில் காதல் வலையில் சிக்க வைத்து பெண்களை ஏமாற்றிய இளைஞரின் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் பெயரில் ஏமாற்றப்பட்ட மூன்று இளம்பெண்கள் போலீசில் புகார் அளித்ததை அடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
மூன்று பெண்களுடன் காதல் வலை
தார் மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் மக்வானா என்ற இளைஞர், மூன்று பெண்களையும் ஒரே நேரத்தில் காதல் மோசடி செய்து வந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பெண்ணுடனும் வெவ்வேறு இடங்களில் நெருக்கம் காட்டிய அவர், அந்த தருணங்களை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார்.
ஆபாச வீடியோ மூலம் மிரட்டல்
பின்னர், அந்த ஆபாச வீடியோ களை பயன்படுத்தி பெண்களை மிரட்டியதாகவும், சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என அச்சுறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் பயந்த பெண்கள் நேரடியாக காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: தங்கையை கர்பமாக்க காரணமாக இருந்த அக்கா.! திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்.!
கைது மற்றும் வழக்கு
புகார் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்து, குஜராத்தின் மோர்பியில் இருந்து ஆகாஷ் மக்வானாவை கைது செய்தது. அவர்மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல், போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இளைஞர் கைதானதை அடுத்து, இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை ஏமாற்றும் இத்தகைய மோசடிகளை முறியடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 9- வது திருமணத்திற்கு குஷியாக தயாரான பெண் கைது.! போலீஸ் அதிரடி.!