தங்கையை கர்பமாக்க காரணமாக இருந்த அக்கா.! திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்.!



Dindukal sister abusing own sister to make pregnant with her husband

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரவிகிரி என்ற நபர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தோரை சேர்ந்த சிவரஞ்சனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிவரஞ்சனிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு தங்கை இருந்துள்ளார்.

திடீரென உடல்நல குறைவு

அந்த பெண்ணும் சிவரஞ்சனி மற்றும் ரவிகிரி இருவருடன் வசித்து வந்துள்ளார். சிறுமியான அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மர்ம உறுப்பை தடவி.. பெண்ணிடம் அத்து மீறிய கயவன்.. கண்ணிமைக்கும் நேரத்தில் மாயம்.!

dindukal

சிவரஞ்சனியும் உடந்தை

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தது. இது பற்றி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், ரவிகிரி அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததும், பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. இதற்கு அக்கா சிவரஞ்சனியும் உடந்தையாக இருந்துள்ளார்.

போக்ஸோ

எனவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட தங்கையின் வாழ்க்கையை சொந்த அக்காவே இப்படி சீரழித்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 14 வயதில் காதல், 15ல் திருமணம் & கர்ப்பம்.. சேலத்தில் பகீர் சம்பவம்.! இளைஞருக்கு வலைவீச்சு.!