இதைக்கூடவாடா திருடுவீங்க?!,, அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!,, பூட்டு போட்டாலும் காப்பாத்த முடியாத போலீஸ்..!



miscreants-are-said-to-steal-the-fuse-carriers-in-the-t

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மின்சார வாரியம் மின் கம்பங்களை அகற்றி அதற்கு பதிலாக தரை பகுதியில் 6 ஆடிக்கு கீழே கேபிள் அமைக்கும் பணியை செய்து வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான வார்டுகளில் இந்த பணிகள் முடிவடைந்து அதன் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளின் காரணமாக, மின் மாற்றிகள் தரை பகுதியில் குறைந்த அளவு உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மின் மாற்றியில் உள்ள பியூஸ் கேரியர்களை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக கூறப்படுகிறது. கடலூர், புதுப்பாளையம் பகுதியில் அடிக்கடி இந்த திருட்டு நடந்து வந்தது. தற்போது அதில் சில இடங்களில் பொது மக்களே பூட்டு போட்டு பாதுகாத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வன்னியர்பாளையம் வேல் நகர் பகுதியில் பியூஸ் கேரியர் திருட்டு அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக நள்ளிரவு 1 மணிக்கு மேல் மின்மாற்றியில் உள்ள பியூஸ் கேரியரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தூக்கமின்றி விடிய, விடிய தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக அவதியுற்ற மக்கள், மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் தற்காலிகமாக ஒயரை மாட்டி மின் இணைப்பு கொடுத்துள்ளனர். மற்ற பியூஸ் கேரியர்களை விட  இந்த பெட்டியில் உள்ள பியூஸ் கேரியர்கள் விலை அதிகம் என்பதால், இதனை குறிவைத்து ஒரு கும்பல் பியூஸ் கேரியரை திருடி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இரவு நேரங்களில் காவல்தூறையினர் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.