மெட்ரோ ரயில் நேரம் குறைப்பு... எவ்வளவு நேரம் இயங்கும் தெரியுமா?

மெட்ரோ ரயில் நேரம் குறைப்பு... எவ்வளவு நேரம் இயங்கும் தெரியுமா?


metro-train-time-in-chennai-has-been-reduced-and-an-announcement-has-been-made

பொது போக்குவரத்து வசதி வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து செப்டம்பர் 1 முதல் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது. மேலும் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் 11 மணி வரை இயக்கப்படும். ஆனால் இனி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai

காலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் 8.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் 5 மணி முதல் 8 மணி வரையும் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

நிலையங்களில் ரயில் 20 வினாடிகள் நின்று செல்லும், இந்த நேரம் 50 வினாடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் டோக்கன் மூலம் பயணிக்கும் முறைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு மூலம் பயணிக்க ஊக்குவிக்கப்படவுள்ளனர்.