தமிழகம்

ஊரடங்கு நேரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலையை இழந்த சோகம்! குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!

Summary:

man suicide attempt with his family

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர்க்கும் கூட்டம், ஊரடங்கால் நடத்தப்படவில்லை. இந்தநிலையில், பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மனு போட்டுவிட்டு சென்றனர்.

இந்தநிலையில் நிலக்கோட்டை தாலுகா ராமராஜபுரத்தை சேர்ந்த முனிப்பாண்டி, அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மனு கொடுப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணெயை 4 பேரும் தங்களுடைய உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர். இதனைப்பார்த்த போலீசார் 4 பேரையும் தடுத்து மீட்டனர். 

இதனையடுத்து அந்த 4 பேரையும் கவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், முனிப்பாண்டி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். இந்த கொரோனா சமயத்தில் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். மேலும் சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் விரக்தியில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.


Advertisement