"அவர் வீட்டுல இல்ல வா..." மனைவி, கள்ளக்காதலன் தலை துண்டித்து படுகொலை.!! கணவன் வெறி செயல்.!!



man-murder-his-wife-and-lover-by-behead-them

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டலம் கிராமத்தில் கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி மற்றும் அவரது காதலன் தலைத் துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 2 பேரின் தலையுடன் வேலூர் சிறைச்சாலையில் சரணடைந்த கொளஞ்சி என்ற நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மலைக்கோட்டலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் கொளஞ்சியின் இரண்டாவது மனைவி லட்சுமி என தெரிய வந்தது. மேலும் அவருடன் கொலை செய்யப்பட்ட மற்றொரு நபர் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு என காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

tamilnadu

இந்நிலையில் தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கொலை செய்து தலையை துண்டித்து எடுத்து வந்ததாக கொளஞ்சி வேலூர் மத்திய சிறைச்சாலையில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொளஞ்சியின் இரண்டாவது மனைவி லட்சுமிக்கு தங்கராசுடன் கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. மேலும் தங்கராசு மற்றும் லட்சுமி ஆகியோர் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு கொளஞ்சி வேலூர் செல்வதாக தனது மனைவி லட்சுமியிடம் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!

இதனைத் தொடர்ந்து கொளஞ்சி சென்றதும் தனது கள்ளக்காதலன் தங்கராசுவை வீட்டிற்கு அழைத்த லட்சுமி அவருடன் மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் மொட்டை மாடிக்கு வந்த கொளஞ்சி, தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை தலை துண்டித்து கொலை செய்துவிட்டு அவர்கள் இருவரது தலையையும் பையில் போட்டு எடுத்துக்கொண்டு வேலூர் மத்திய சிறையில் சரணடைந்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "காதல் பண்ண விட மாட்டியா..." கணவன் குத்தி படுகொலை.!! மனைவி கள்ளக்காதலன் கைது.!!