கணவரை கொன்று புதைத்து பலே நாடகம்.. 2 ஆண்டுகளுக்குப்பின் கள்ளக்காதலனுடன் சிக்கிய பெண்.. பரபரப்பு தகவல்.! 



Woman Arrested 2 Years After Killing Husband and Burying Body With Lover in Gujarat

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்த மனைவி, 2 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 

மாயம்: 

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜிக்னேஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளாக மாயமான நிலையில், அவரை தொடர்புகொள்ள முயன்றபோது, ஜிக்னேஷ் ஆஸ்திரேலியா சென்றிருப்பதாகவும், அவரின் நிறுவனத்தில் போனில் பேச அனுமதி கிடையாது என்றும் ஜிக்னேஷின் மனைவி பிரீத்தி தெரிவித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற பின்னர் அவர் இந்தியா வருவார் எனவும் குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார். 

இதையும் படிங்க: என்னதான் நடக்குது கோவையில்.. 13 வயது சிறுவனை அடித்துக்கொன்ற நண்பர்கள்.. திடுக்கிடவைத்த வாக்குமூலம்.!

Crime news

சந்தேகம்:

இந்நிலையில், ஜிக்னேஷின் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு, ஜிக்னேஷின் ஆஸ்திரேலிய நம்பர் குறித்து கேட்டுள்ளார். அப்போது, பிரீத்தியின் பதில் சந்தேகத்தை எழுப்பவே, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்து இருக்கிறார். இதனால் பதறிப்போன பெண்மணி, தனது கணவரை 2 ஆண்டுகளுக்கு முன்பே கொலை செய்து புதைத்ததாக தெரிவித்துள்ளார். 

Crime news

விசாரணை: 

பின் இதுதொடர்பாக ஜிக்னேஷின் சகோதரர் அசோக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதாவது, கள்ளக்காதலன் நிலேஷ் என்பவருடன் சேர்ந்து ஜிக்னேஷை 2024 ம் ஆண்டு மே மாதம் கொலை செய்துள்ளார். கணவருக்கு மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை அரங்கேறிய நிலையில், ஜிக்னேஷின் உடலை தொழிற்சாலை ஒன்றுக்குள் 12 அடி ஆழ குழிதோண்டி புதைத்து இருக்கின்றனர். இந்த உண்மை அம்பலமானதைத்தொடர்ந்து, உடலின் எச்சங்களை மீட்கும் பணியில் இறங்கிய அதிகாரிகள், கள்ளக்காதல் ஜோடியை கைது செய்தனர். 

இதையும் படிங்க: கள்ளக்காதலியை திருமணம் செய்ய அண்ணனிடம் பெண் கேட்ட இளைஞர்.. கடலில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பறிபோன உயிர்.!