தமிழகம்

10 நிமிடத்தில் 4 குவாட்டர் பாட்டில்! ராவாக குடித்தவருக்கு சில நொடிகளிலேயே நேர்ந்த விபரீதம்!

Summary:

Man dead while drinking liquor without water

உத்திரபிரதேசம், உகான்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்  ராஜேந்திர சிங். இவர் மதுபழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இந்நிலையில் ராஜேந்திர சிங் சமீபத்தில்  தனது உறவினரான பிரதீப் என்பவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் மது குடிப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.  அப்பொழுது அவர்கள் நான்கு குவாட்டர் பாட்டில்களை வாங்கியுள்ளனர். அதில் யார் தண்ணீர் கலக்காமல் அப்படியே வேகமாக அதிகமாக குடிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவராவார். மேலும் தோல்வியடைந்தவர்  8 குவாட்டர் பாட்டிலுக்கும் பணம் கொடுக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளனர்.

பின்னர் போட்டி ஆரம்பித்த பத்து நிமிடத்தில் ராஜேந்திர சிங் தண்ணீர் கலக்காமல், ராவாக 4 பாட்டில்களையும் வாங்கி குடித்துள்ளார். பின்பு மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்தவர் 1 மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே உயிரிழந்தார்.

தண்ணீர் சேர்க்காமல் ராவாக குடித்ததாலேயே இவ்வாறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.


Advertisement