தமிழகம்

மூதாட்டியை கடித்துக்கொன்ற கொரோனோவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர்.! தேனி அருகே நடந்த பரபரப்பு சம்பவம்.!

Summary:

Man bites old lady near theni who under corono isolation

கொரோனா கண்காணிப்பில் இருந்த நபர் வீட்டு வாசலில் படுத்திருந்த 90 வயது மூதாட்டி ஒருவரை கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள ஜக்கமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்துவரும் மணிகண்டன் கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், மணிகண்டன் வெளிநாட்டில் இருந்து திரும்பியதால் அவரை மாவட்ட சுகாதாரத்துறை, வீட்டுக்கண்காணிப்பில் வைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் தனது வீட்டின் வாசலில் உறங்கிக்கொண்டிருந்த 90 வயது மூதாட்டியான நாச்சியம்மாள் என்பவரின் கழுத்தில் பலமாக கடித்துள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை பிடித்து கயிறுகளால் கட்டி வைத்துள்ளனர்.

பின்னர், மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க, சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிர் இழந்துள்ளார். தற்போது மணிகண்டன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிமை படுத்தலில் உள்ளவர்கள் மன ரீதியான பிரச்னைகளை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டநிலையில், நபர் ஒருவர் மூதாட்டியை கடித்து கொலை செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.


Advertisement