மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500....! அமைச்சர் சொன்ன சூசக பதில்.... அப்போ நாளை தெரிஞ்சுடும்!



magalir-urimai-thogai-hike-expected-tn-assembly

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கான மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் இந்த உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படலாம் எனக் கூறப்படுவதால், பயனாளிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பேரவையில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

தகவலின்படி, இந்தத் திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையிலேயே வெளியிடக்கூடும் என கூறப்படுகிறது. இதனால் பேரவைக் கூட்டத்தொடரின் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது.

இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!

அமைச்சர் வன்னிஅரசின் சூசக பேச்சு

இதற்கிடையில், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் வன்னிஅரசு உரிமைத்தொகை உயர்வு தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, இதுகுறித்த முக்கிய தகவல் ஜூன் 18-ஆம் தேதி தெரியவரும் என சூசகமாக குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இரண்டு முறை வழங்கப்பட்ட தொகை

தவெக ஆட்சியில் பெண்களுக்கான உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஏற்கனவே இரண்டு முறை தலா ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. தற்போது தொகை உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாளைய அறிவிப்பை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இன்று முதல் அமைச்சரவைக்கூட்டம்! மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500..... CM விஜய் வெளியிடப்போகும் அதிரடி அறிவிப்பு..!!!