43 வயதிலும் என்ன ஒரு அழகு.. கவனத்தை ஈர்த்த திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்.!
குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!
தமிழகத்தில் பெண்களுக்கான நலத்திட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் புதிய மதிப்புமிகு மகளிர் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தகவலின்படி, இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுவரை தற்போது செயல்பாட்டில் உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வழக்கம்போல தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.31 கோடி பெண்களுக்கு தொடர்ந்து உதவித்தொகை
தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் சுமார் 1.31 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில் எந்த மாற்றமும் இருக்காது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர்! உயர போகும் மகளிர் உரிமைத் தொகை..? முதல்வர் கொடுத்த முக்கிய அப்டேட்!
அதன்பின், இந்த மாதத்திற்கான ரூ.1,000 உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பயனாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
புதிய பயனாளிகள் சேர்க்கை விரைவில்?
இதையடுத்து, திட்டத்தில் இதுவரை சேராத தகுதியான பெண்களை இணைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, மகளிர் உரிமைத் திட்டம் மூலம் ஏற்கனவே பல குடும்பங்கள் பயன்பெற்று வரும் நிலையில், புதிய திட்டத்தின் தொகை உயர்வு பெண்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! விடுபட்ட இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!