BREAKING: சற்று முன்... அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.10,000…! வெளியாகும் தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!!
தமிழக அரசின் வரவிருக்கும் வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. 'வெற்றி தமிழகம்' என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படும் இந்த பட்ஜெட்டில், விவசாயிகளின் நலனை மையமாகக் கொண்ட பல புதிய திட்டங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குத்தகை விவசாயிகளுக்கும் புதிய அங்கீகாரம்
தகவலின்படி, நில உரிமையாளர்கள் மட்டுமல்லாமல், குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களும் அரசு நலத்திட்டங்களின் பயனை எளிதாகப் பெறும் வகையில் உழவர் உரிமை அட்டை வழங்கப்பட உள்ளது. நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இந்த முயற்சி தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கடந்த வருடம் 6 வயது குழந்தை... இப்போ மனைவி! அடங்காத வெறியால் ஜாமீனில் வெளியே வந்து கணவன் செய்த பயங்கரம்! வங்கியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!!
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.10,000 உதவித்தொகை வழங்கும் திட்டமும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொள்முதல் விலை உயர்வுக்கு வாய்ப்பு
விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்தும் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை நேரடியாக விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனை மரத்திற்கு சிறப்பு அந்தஸ்து
மேலும், தமிழகத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான பனை மரத்தை பாதுகாக்கும் நோக்கில், 'பாதுகாக்கப்பட்ட மரம்' என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்புகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், மாநிலத்தின் வேளாண் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கும் முக்கிய பட்ஜெட்டாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: BREAKING: ரேஷன் அட்டைதாரர்களுக்கு... நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழக அரசின் அதிரடி சர்ப்ரைஸ்! மிஸ் பண்ணிட்டாத்தீங்க....!!!