சிகிச்சை அளிக்க மறுத்த பெண் மருத்துவர்! அங்கு நடந்தது என்ன? வைரலாகும் 16 விநாடி வீடியோவால்... மருத்துவமனை நிர்வாகம் அளித்த பரபரப்பு விளக்கம இதோ...!!!
மத்திய பிரதேச மாநிலம் அம்பா அரசு சிவில் மருத்துவமனையில், பைக் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக பெண் மருத்துவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான 16 விநாடி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
வைரலான 16 விநாடி வீடியோ
விபத்தில் காயமடைந்தவர்களுடன் மருத்துவமனைக்கு வந்த உறவினர்களுக்கும், மருத்துவர் ஆர்த்தி தண்டோதியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மருத்துவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து செல்வது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதனால், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர்.
மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கம்
வீடியோவின் அடிப்படையில் மட்டும் முழு சம்பவத்தையும் புரிந்துகொள்ள முடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த மூன்று நோயாளிகளுக்கும் வீடியோ பதிவு செய்யப்படுவதற்கு முன்பே மருத்துவர் ஆர்த்தி சிகிச்சை அளித்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்பிறகே நோயாளிகளின் உறவினர்களுக்கும் மருத்துவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மருத்துவருக்கு ஆதரவாகவும் கருத்துகள்
இதனிடையே, Doctor Viral Video தொடர்பாக இணையத்தில் மாறுபட்ட கருத்துகள் பதிவாகி வருகின்றன. சிலர் மருத்துவரின் நடத்தையை விமர்சித்து வரும் நிலையில், பலர் வேறுபட்ட கோணத்தை முன்வைத்துள்ளனர். நோயாளிகளின் உறவினர்களின் தவறான அல்லது ஆக்ரோஷமான நடத்தையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே மருத்துவர் அங்கிருந்து சென்றிருக்கலாம் என்றும், அவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே வாக்குவாதம் நடந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், வைரலான குறுகிய வீடியோவின் அடிப்படையில் மட்டுமே முழு நிகழ்வையும் மதிப்பிட முடியாது என்ற விவாதமும் எழுந்துள்ளது. மருத்துவர் ஆர்த்தி தண்டோதியா தொடர்பான இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
Female Doctor Se Behas Hui, Injured Patients Ko Chhodkar Uthkar Chali Gayi! Budhwar raat Ambah Civil Hospital mein accident mein injured teen logon ka treatment chal raha tha. Parijanon ke mutabik, dressing ke baad unhone female doctor se patients ko dekhne ke liye kaha. Doctor… pic.twitter.com/MqaEmZiijL
— Sahodar – Equality For Men (@SahodarIndia) September 18, 2026