#JUSTIN: நொடியில் நடந்த கோர விபத்து.. இளம் தம்பதி, பச்சிளம் பிஞ்சு என 4 பேர் பலி.. மதுரையில் சோகம்.!
தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரில்லாத சோகம் நடந்துள்ளது.
விபத்து:
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் நடந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் கார், மற்றொரு காருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கார் - டூவீலர் மோதி பயங்கரம்.. காவு வாங்கிய ஆபத்து வளைவு.. 3 இளைஞர்கள் துள்ளத்துடிக்க பலி.!
சென்னை குடும்பம்:
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில் மதுரை நோக்கி பயணம் செய்துள்ளார். இவர் மதுரைக்கு செல்லும் வழியில் மேலூரில் வைத்து விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஸ்ரீராம், அவரின் மனைவி ரஞ்சனா (வயது 25), ஒன்றரை வயதுடைய குழந்தை பிரணிதா உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

விசாரணை:
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சிறுவனால் நேர்ந்த விபத்து.. 3ம் வகுப்பு சிறுமியின் உயிர் பிரிந்த சோகம்..! பெற்றோர் கண்ணீர்.!