வேறொரு ஆணுடன் பேசியதாக சந்தேகம்.. தூங்கிக் கொண்டிருந்த மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்!



Husband killed wife for cheating

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், வாடகை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 28 வயது மனைவியை கணவனே கொடூரமாகத் தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி வேறொரு ஆணுடன் தொலைபேசியில் பேசி வருவதாக கணவன் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த பர்வேஸ் மற்றும் நக்மா ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்து வந்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு லக்னோவின் இஸ்லாம்நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நக்மா வேறொரு ஆணுடன் தொலைபேசியில் பேசி வருவதாக பர்வேஸ் சந்தேகித்து, அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நக்மா தூங்கிக் கொண்டிருந்தபோது கூர்மையான ஆயுதத்தால் அவரைத் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இனிமேலும் பொறுமை இல்லை... 2 ஆண்டுகளாக கிராமத்தில் நெட்வொர்க் இல்லை..! ஆத்திரமடைந்து டவர் ஊழியரை கட்டி வைத்த கிராம மக்கள்..! வைரல் வீடியோ..!!!

utthar pradesh

சம்பவத்துக்குப் பிறகு பர்வேஸ் நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நக்மாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நக்மாவின் தாய் மற்றும் சகோதரி, பர்வேஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் நக்மாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், ஏற்கனவே அவருக்கு கடுமையான மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் காதலன்.. விடிந்ததும் கணவன்! ஒரே இரவில் மாறிய இளம் ஜோடியின் வாழ்க்கை!