நள்ளிரவில் காதலன்.. விடிந்ததும் கணவன்! ஒரே இரவில் மாறிய இளம் ஜோடியின் வாழ்க்கை!
உத்தரப் பிரதேசத்தில், காதலியை சந்திக்க நள்ளிரவில் அவரது வீட்டுக்குச் சென்ற இளைஞர், எதிர்பாராத விதமாக பெண்ணின் குடும்பத்தினரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த விவகாரம் இறுதியில் இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்துள்ளது.
ஆகாஷ் (20) என்ற இளைஞர், தனது காதலியை சந்திப்பதற்காக நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, இளைஞர் அங்கு இருப்பதைப் பார்த்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ஆகாஷை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், ஆகாஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மறுநாள் காலை, இரு குடும்பத்தினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்த போலீசார், சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: முதல் இரவில் தொடங்கிய சந்தேகம்.. ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு மனைவிக்கு தெரியவந்த கணவரின் ரகசியம்!

அப்போது காவல் நிலையத்துக்கு வந்த இளம்பெண், ஆகாஷ் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்றும், அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் குடும்பத்தினர் முன்னிலையில் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. காதலில் அவர் உறுதியாக இருந்ததைத் தொடர்ந்து, இரு குடும்பத்தினரும் தங்களது எதிர்ப்பை கைவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, இரு குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் அருகிலுள்ள கோயிலில் வைத்து ஆகாஷ் மற்றும் அவரது காதலிக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால், நள்ளிரவில் தொடங்கிய காதல் சந்திப்பு, குடும்பத்தினர் மோதல் மற்றும் காவல் நிலைய பேச்சுவார்த்தை என பல்வேறு திருப்பங்களை கடந்து இறுதியில் திருமணத்தில் முடிந்தது.
இதையும் படிங்க: முதலிரவில் திடீரென காணாமல் போன மணமகன்… மனைவி கூறிய ஒரு வார்த்தைக்குப் பிறகு நடந்த அதிர்ச்சி!