முதல் இரவில் தொடங்கிய சந்தேகம்.. ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு மனைவிக்கு தெரியவந்த கணவரின் ரகசியம்!



Health issue husband distance wife

உத்தரப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண்ணின் குடும்பத்தினர் சுமார் ரூ.15 லட்சம் ரொக்கப் பணம், கட்டில், சோபா, தொலைக்காட்சி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களை வரதட்சணையாக வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், திருமணத்துக்குப் பிறகும் பெண்ணின் மாமியார் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, கால்நடை மருத்துவராக பணியாற்றி வரும் கணவருக்கு கார் வாங்கித் தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளம் பெண் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது.

இதற்கிடையே, திருமணமான நாள் முதலே கணவர் இரவு நேரங்களில் மனைவியுடன் ஒரே அறையில் தங்காமல் வேறு அறையில் சென்று தூங்கியதாக கூறப்படுகிறது. வேலைப்பளு, உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அவர் கூறி வந்ததாக தெரிகிறது. ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத மனைவிக்கு, நாட்கள் செல்லச் செல்ல கணவரின் நடவடிக்கை சந்தேகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முதலிரவில் திடீரென காணாமல் போன மணமகன்… மனைவி கூறிய ஒரு வார்த்தைக்குப் பிறகு நடந்த அதிர்ச்சி!

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, கணவரின் நடவடிக்கை குறித்து அந்தப் பெண் தனது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கணவருக்கு உடலுறவு கொள்ள இயலாத மருத்துவப் பிரச்சனை இருப்பதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு முன்பே தனது உடல்நலப் பிரச்சனையை மறைத்து திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், திருமணத்துக்குப் பிறகு கூடுதல் வரதட்சணையாக கார் கேட்டு துன்புறுத்தியதாகவும் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பிறந்த வீட்டிலிருந்து திரும்பிய 5 நாட்களில் விபரீதம்! 22 வயது இளம்பெண் மர்ம மரணம்!