திடீரென பெயரை மாற்றிய திமுக எம்.பி கனிமொழி.. இனி இந்தப் பெயரில்தான் அழைக்கணும்!
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக எம்.பி.யும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி, தனது பெயரில் அதிகாரப்பூர்வ மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். இனி அரசு மற்றும் அதிகாரப்பூர்வ பதிவுகளில் அவரது பெயர் “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” என இடம்பெற உள்ளது.
இதுவரை அரசியல் மற்றும் பொதுவெளியில் “கனிமொழி கருணாநிதி” என்ற பெயரில் அறியப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது தாயார் ராஜாத்தியின் பெயரையும் தனது பெயருடன் இணைத்துள்ளார். இதற்கான பெயர் மாற்றம் அரசு கெஜட்டில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் கனிமொழியின் பெயரில் “ராஜாத்தி” என்ற பெயர் புதிதாக இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ சுயவிவரத்திலும் அவரது தாயார் பெயர் “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. கனிமொழி, மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதி மற்றும் ராஜாத்தி அம்மாளின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 177 தனியார் பள்ளிகள்.. பல கோடி வசூல்? சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. CCB போலீசார் அதிரடி நடவடிக்கை!
கனிமொழி நீண்ட காலமாக “கனிமொழி” என்ற பெயருடன் கருணாநிதி என்ற குடும்பப் பெயரைப் பயன்படுத்தி வந்துள்ளார். 2007-ம் ஆண்டு வெளியான ஒரு நேர்காணலிலும், தேவையான சூழலில் தன்னை “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” என அழைக்க விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பெயர் மாற்றத்தின் மூலம், தந்தையின் பெயரான “கருணாநிதி”யுடன் தாயார் பெயரான “ராஜாத்தி”யும் இணைந்துள்ளது. இதன்படி, அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் அரசு பதிவுகளில் அவரது பெயர் இனி கனிமொழி ராஜாத்தி கருணாநிதி என்ற புதிய வடிவில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எலி வேட்டைக்கு போகமாட்டேன்.. புலி வேட்டைக்கு தான் போவேன்! நான் வீழவில்லை.. வீழ்ந்தது தீய சக்தி, ஊழல் சக்தி! மதிமுக துரை வைகோ ஆவேச பேச்சு!!!