
leave for election
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 27, 30ஆம் தேதியன்று பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி மற்றும் ஊரகத் தேர்தல் வரும் 27 மற்றும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெரும் பகுதிகளில் வரும் 27, 30ஆம் தேதியன்று பொதுவிடுமுறை விட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கும் வரும் 27, 30ஆம் தேதியன்று விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
Advertisement
Advertisement