மத்திய அரசை இப்படியா சொன்னிங்க..! செம்ம பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு.!

மத்திய அரசை இப்படியா சொன்னிங்க..! செம்ம பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு.!


kushboo talk about indian govt

மத்திய அரசை, ஒன்றிய அரசு என சமீப காலமாக தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் குறிப்பிட்டு வருகின்றனர். தி.மு.க., நிதி அமைச்சர் தியாகராஜனும், சமீபத்தில் அளித்த பேட்டியில், மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிட்டு சட்டத்தில் அப்படி தான் இருக்கிறது என விளக்கம் அளித்தார். 

இந்நிலையில், பா.ஜ.க. பிரமுகரும் நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைத்தால், நாம் பாரத பேரரசு என்று அழைப்போம், என பதிவிட்டுள்ளார். 

மேலும் தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி.  வாழ்க பாரத தேசம் வாழ்க தமிழகம் என கூறி உள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.