நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
26 பேரை துடிதுடிக்க வைத்த பாஸ்ட்புட் கடைக்கு சீல்.. கிருஷ்ணகிரியில் அதிகாரிகள் அதிரடி.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரப்பள்ளி, சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. அங்குள்ள தனியார் நிறுவனத்தில் 2000 க்கும் அதிகமான பணியாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.
இந்நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள், அங்குள்ள சக்தி பாஸ்ட்புட் கடையில் இரவில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். உணவு சாப்பிட்ட 26க்கும் மேற்பட்ட தமிழக, வடமாநில தொழிலாளர்கள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். பின், சக்தி பாஸ்ட்புட் கடைக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.