தமிழகம்

லேடீஸ் ஹாஸ்டல் கழிவறை! உள்ளே சென்ற இளம் பெண்! படமெடுத்து ஆடிய ராஜ நாகம்! கொலை நடுங்கும் சம்பவம்!

Summary:

King cobra found in hostel toilet

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் மகளிர் விடுதி ஓன்று செயல்பட்டுவருகிறது. படிக்கும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் அந்த விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் அந்த விடுதியில் இருக்கும் அறை ஒன்றில் தங்கியிருக்கும் இளம் பெண் ஒருவர் தங்கள் அறையில் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறையில் வெஸ்டர்ன் டாய்லெட் அருகே ஏதோ நெளிவதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அருகில் சென்று பார்த்தபோது மிகப்பெரிய பாம்பு ஓன்று இருந்துள்ளது. உடனே மற்றவர்களும், தீயணைப்பு வீரர்களும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து பாம்பை பிடித்தனர்.

கழிவறை உள்ளே இருந்தது, மிக கொடிய விஷம் கொண்ட ராஜ நாக பாம்பு என்றும், ஒருமுறை கடித்தால் உயிரே போய்விடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement