உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பாமக.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பாமக.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!


jayakumar talk about PMK

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் 9 மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6, 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. 

jayakumar

இந்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பாமக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பாமக தனித்துப் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது அவர்களுக்குத்தான் இழப்பு. 

யாருடைய கட்டாயத்தின் பேரில் தனித்துப்போட்டி என முடிவெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி சரியவில்லை. வலுவான எதிர்கட்சியாக அதிமுக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவோம். அதிமுகவில் உள்கட்சிப் பிரச்சினை என்பதே கிடையாது என தெரிவித்துள்ளார்.