காதலனை நம்பிச் சென்று கண்ணீருடன் திருப்பிய பள்ளி மாணவி.. காதல் பெயரில் அரங்கேறிய கொடுமை.!
காதல் பெயரில் சிறுமியை தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
12ம் வகுப்பு சிறுமி:
School Girl Raped: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு, வேப்பூர் செக்கடி பகுதியில் வசித்து வருபவர் ஏழுமலை. இவரின் மகன் கருப்பன் (வயது 28). இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இவருக்கு இன்ஸ்டாகிராமில் வாயிலாக 17 வயது சிறுமியின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செயல்படும் அரசுப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சாக்லேட் கொடுப்பதாக நடந்த கொடுமை.. அலறி ஓடிவந்து கதறிய சோகம்.!

இன்ஸ்டாகிராம் காதல்:
இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி பழகிய நிலையில், ஒருகட்டத்தில் செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டு பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளுக்கு நாள் நெருக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜூன் 8ம் தேதி சிறுமி பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். பின் காதல் ஜோடியின் திட்டப்படி, இருவரும் சாத்தனூர் அணைக்கு சென்றுள்ளனர்.
ஆசைவார்த்தை கூறி அத்துமீறல்:
காதலன் தனது காதலியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சிறுமியை அழைத்துச் சென்ற நிலையில், சிறுமி அதிர்ச்சியாகி இருக்கிறார். ஆசைவார்த்தை கூறி அத்துமீறிய நிலையில், பின் சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்து பள்ளியின் அருகே விட்டுச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி வன்கொடுமை.. காட்டுப்பகுதியில் நடந்த அவலம்.. காதல் பெயரில் கொடூரம்.!