11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சாக்லேட் கொடுப்பதாக நடந்த கொடுமை.. அலறி ஓடிவந்து கதறிய சோகம்.!



Chennai Man Arrested Under POCSO Act for Allegedly Harassing 11-Year-Old Girl with Chocolate Lure

வீட்டு வாசலில் விளையாடிய சிறுமிக்கு 50 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

11-Year-Old Girl Sexually Harassed: சென்னையில் உள்ள மயிலாப்பூர், நொச்சிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 50). இவரது வீட்டருகே சம்பவத்தன்று 11 வயதுடைய சிறுமி விளையாடி வந்துள்ளார். இவருக்கு அவ்வப்போது சாக்லேட் வாங்கி கொடுத்து பேசி வந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவத்தன்றும் அதேபோல விளையாடிய சிறுமியை அதிக சாக்லேட் மற்றும் செலவுக்கு பணம் தருவதாக கூறி தனது வீட்டு அழைத்துச் சென்றுள்ளார்.

பாலியல் தொல்லை:

அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், சிறுமி ரமேஷின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளார். பின் சிறுமி வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுத நிலையில், பதறிப்போன பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

Crime news

காவல்துறை விசாரணை:

இதனையடுத்து, புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, தான் போதையில் இருந்ததாகவும், அப்போது தெரியாமல் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்ஸோ வழக்கில் ரமேஷை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியை வீட்டுக்கு அழைத்து பாதிரியாரின் பகீர் செயல்.. போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!