14 வயது சிறுமி வன்கொடுமை.. காட்டுப்பகுதியில் நடந்த அவலம்.. காதல் பெயரில் கொடூரம்.!



in Trichy 14 Year Old Girl Raped 

காட்டுப்பகுதியில் 14 வயது சிறுமியை காதலின் பெயரில் வன்கொடுமை செய்த திருமணமான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோயில் திருவிழா பழக்கம்:

14 Year Old Girl Raped: திருச்சி மாவட்டத்தில் வசித்து வரும் 14 வயதுடைய சிறுமி, ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்னதாக உள்ளூரில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியிடம் இளைஞர் ஒருவர் பேச்சுக்கொடுத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகி கைது.. சென்னையில் ஷாக்.!

பள்ளிக்கு செல்வதாக புறப்பட்ட சிறுமி:

பின் சிறுமி இளைஞரிடம் செல்போன் நம்பரை கொடுத்ததாக தெரியவரும் நிலையில், இருவரும் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்து பேசத்தொடங்கி இருக்கின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் சிறுமி பள்ளிக்குச் செல்வதாக புறப்பட்டுள்ளார்.

காட்டுப்பகுதியில் கொடுமை:

வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுமி வாலிபருடன் கிளம்பியதாக கூறப்படும் நிலையில், சிறுமியை நாகமங்கலத்தில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமை துயரமும் நடந்துள்ளது. பின் சிறுமியை வீட்டருகே கொண்டு சென்று விட்டுச் சென்றுள்ளார்.

trichy

காவல்நிலையத்தில் புகார்:

இதனிடையே, சிறுமி பள்ளிக்கு வரவில்லை என பெற்றோருக்கு தொடர்புகொண்டு ஆசிரியர் தெரிவிக்கவே, வீட்டுக்கு வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்து இருக்கின்றனர். அப்போது நடந்ததை கூறவே, கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த இளைஞரின் அதிர்ச்சி செயல்:

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறுமியை வன்கொடுமை செய்தது திருச்சி நாகமங்கலம் பகுதியில் வசித்து வரும் பூபதி என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகளும் இருக்கின்றனர். விசாரணைக்குப்பின் பூபதி சிறையில் அடைக்கப்பட்டார்.
 

இதையும் படிங்க: 14 வயது சிறுமியின் கையை கடித்துக்குதறிய இளைஞன்.. சாலையில் அரங்கேறிய வெறிச்செயல்.!