14 வயது சிறுமியின் கையை கடித்துக்குதறிய இளைஞன்.. சாலையில் அரங்கேறிய வெறிச்செயல்.!



25-Year-Old Arrested Under POCSO for Harassing and Biting 14-Year-Old Schoolgirl in Tirupattur

சாலையில் நடந்து சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த நபர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.

9ம் வகுப்பு மாணவி: 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் தம்பதிக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். தற்போது கோடை விடுமுறையில் இருக்கிறார். 

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

சில்மிஷம்:

இதனிடையே, சம்பவத்தன்று அப்பகுதியில் இருக்கும் சாலையில் சிறுமி நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்குள்ள மாடப்பள்ளி பகுதியில் வசித்து வரும் லட்சுமணன் (வயது 25) சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. 

Crime news

காவல்நிலையத்தில் புகார்:

இதனால் பதறிப்போன சிறுமி கூச்சலிடவே, லட்சுமணன் சிறுமியின் கைகளை கடித்து குதறிவிட்டு ஓடி இருக்கிறார். இதனால் காயமடைந்த சிறுமியை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பின் இதுதொடர்பாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

போக்ஸோவில் கைது:

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், லட்சுமணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 

இதையும் படிங்க: பள்ளி மாணவியை வீட்டுக்கு அழைத்து பாதிரியாரின் பகீர் செயல்.. போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!