குடி, மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்.. 2 உயிர்களை குடித்த எமபாதகன்.. திருவாரூரில் துயரம்.!
காதல் திருமணம் செய்துகொண்ட பெண்மணி, கணவரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
தற்கொலை:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருகவாழ்ந்தான், ஏரிக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்த் (வயது 32). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். ஆனந்தின் மனைவி ஓவியா. தம்பதிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்கும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதனிடையே, கடந்த ஆண்டில் ஓவியா உடலில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!
பெண்ணுடன் பழக்கம்:
இவர் தனது மரணத்துக்கு கணவரே காரணம் என மருத்துவமனையில் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். இதன்பேரில் ஆனந்தன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், ஆனந்தன் ஜாமினில் வெளியே வந்துள்ளார். பின் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், அம்மாசமுத்திரம் கிராமத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு அனிதா (வயது 28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அனிதாவுக்கு திருமணம் முடிந்து மூன்றரை வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது.

புதிய வாழ்க்கையில் திருப்பம்:
அனிதாவின் கணவர் 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஆனந்தை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். பின் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, அனிதா தனது குழந்தையை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு திருமண உறவில் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். ஆனந்துக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், போதையில் தினமும் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கட்டாயப்படுத்தி கொடுமை:
மனைவிக்கு விருப்பம் இல்லை என்றாலும், வலுக்கட்டாயமாக அழைத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு உருவாகிய நிலையில், நேற்று அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அக்காவின் ஆசைக்கு தம்பி எதிர்ப்பு.. 7 வயது மகள் கண்முன் தாய்மாமன் நடத்திய பயங்கரம்.. நெல்லையில் கொடூரம்.. பகீர் பின்னணி.!